தலைவிரிகோலமாய் தெருவிலே நடந்து சென்ற ஞானி ஒருவரைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடியது. ஞானிக்கு உருவான மக்கள் கூட்டத்தைப் பார்த்து பொறாமை கொண்டான் ஒருவன். சிறிது நேரத்தில் இதே போல கூட்டம் நானும் கூட்டிக்காட்டுகிறேன் என தனக்குத்தானே சபதம் செய்து கொண்டு அவன் தன் தலைமுடியை தலைவிரி கோலமாக்கிக் கொண்டு தெருவில் நின்று ஆ.. ஊ.. என அதிக சத்தம் போட்டு கத்தினான். சிறிது நேரத்தில் அவனது ஆசையும் நிறைவேறியது அவன் எதிர்பார்த்தது போலவே அவனுக்கும் கூட்டம் கூடியது. சிறிது நேரத்தில் மக்களுக்கு அவனைப்பற்றி புரிய ஆரம்பித்தது. "டேய்! இவன் பைத்தியம் டா" என கூறிக்கொண்டு சிரித்துக் கொண்டு மக்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
பொதுவாக இந்தக்கதையில் சொல்லப்பட்ட மனிதனைப்போலத்தான் நாட்டில் பலர், அரசியல் தலைவர்கள் என்ற மிதப்பில் நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களைப்போல் தங்களைத்தாங்களே கற்பனை செய்து கொண்டு வறட்டுக் கவுரவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.............................