{"product_id":"muthu-mozhigal","title":"Muthu Mozhigal","description":"\u003cp\u003eதேசம் உய்யத் திருவாசகம் தந்த மாணிக்க வாசகப் பெருமானின் வரலாறு கருத்திற்கினிய விருந்தாகும். வரலாற்றுப் போக்கில் ஐயங்கள் எழுவதற்கு வாய்ப்புண்டு. இது சரியா? அது சரியா? என்று பல கேள்விகளை மாணிக்கவாசகர் வரலாற்றில் எழுப்ப முடியும். ஆம். வெறும் அறிவு விவாதத்திற்குட்பட்டது -நடைமுறைக் கொவ்வாதது. அனுபவத்திற்கல்லாதது. வெற்று அறிவுணர்ச்சியோடு மாணிக்கவாசகர் வரலாற்றைப் படித்தால் குழப்பமே மிஞ்சும். ஆழ்ந்த அறிவோடும், நடைமுறையோடும், அனுபவத்தையும் சாத்தியக் கூறுகளையும் கூட்டி மாணிக்க வாசகர் வரலாற்றைப் படித்தால் அவ் வரலாறு வாழ்க்கைக்குப் பெரு விருந்தாக இருப்பதை உணரலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த முறையில் மாணிக்கவாசகரின் வரலாற்றை ஆராய்வோமாக.\u003c\/p\u003e\n\u003cp\u003e.\u003c\/p\u003e\n\u003cp\u003eபாண்டிய மன்னனிடத்தில் மாணிக்கவாசகர் அமைச்சராக இருக்கின்றார். அறிவிலும், ஆட்சி முறையிலும், குடிமக்களுக்கு நல்லன செய்வதிலும் சிறந்து விளங்குகின்றது மாணிக்கவாசகரது அமைச்சியம். குடிமக்களிடத்திலிருந்து அரசன் வரி வாங்குகின்றான். அங்ஙனம் மக்களிடம் வரி வாங்குவது அரசனுடைய ஆடம்பர வாழ்க்கைக் காக அல்ல; வரிப் பணங்களைக் கொண்டு மக்களின் வாழ்க்கைக்குரிய திருப்பணிகளைச் செய்ய வேண்டும். பாண்டிய மன்னனோ மக்களின் வரிப் பணம் கொண்டு பரிகள் வாங்கி வரச்சொன்னான். பரிகள் ஆடம்பரத்தின் சின்னம் அல்லது போர்ப் படை. பரிகள் வாங்கச் சொன்ன காலத்தில் பாண்டிய அரசனுக்குப் பகையேயில்லை. ஆதலால் ஆடம்பரத்துக்காகவே அரசன் பரிகளை வாங்கிவரச் சொன்னான் என்று கருத இடமிருக்கின்றது.\u003c\/p\u003e\n\u003cp\u003eதேவையற்ற ஒன்றைச் செய்ய அமைச்சர் மாணிக்கவாசகரின் மனம் துணியவில்லை. ஆனால் அரசனின் ஆணை. அரசனைப் பரிவாங்கும் எண்ணத்திலிருந்து நல்வாழ்வுத் துறைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.\u003c\/p\u003e","brand":"None","offers":[{"title":"Kobo eBook","offer_id":46840811159762,"sku":"96bb03b5-ffe2-3c68-8cb4-d9bf8f5ca33c","price":2.99,"currency_code":"CAD","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0655\/8980\/5233\/files\/image_b3f32852-29b6-4bb5-b264-c813bb11bbc0.jpg?v=1780975912","url":"https:\/\/www.indigo.ca\/products\/muthu-mozhigal","provider":"Indigo","version":"1.0","type":"link"}