எனதருமை உறவுகளே! ஆற்றலும் திறமையும் ஆளுமையும் நம்மவர்களிடம் நிறைந்து இருக்கிறது. நம்மவர்களிடம் இருக்கும் தாழ்மைக்குணமும் நம்பிக்கையின்மையும் விளம்பரங்களை உண்மையென என்னும் சோம்பேறிக்குணமும் அயலவர்களின் வியாபார பலம். விவசாயத்திலிருந்து கல்வி வரை மண்பாண்டம் முதல் மருத்துவம் வரை நமது பண்பாடு நிறைந்திருக்கிறது. நாம்தான் உணரவில்லை!. வளர்த்தெடுப்பது நமது கடமை!. எதிர்கால சந்ததியினருக்கு நமது எல்லையற்ற ஆற்றலைக் கொடுத்து வளங்களை வழிகாட்டிச் செல்வோம். அதுதான் நமது பொறுப்புணர்வும் கூட.
எனதருமை பொறுப்பாளர்களே! அரசியல் உயர்பதவியில் இருப்பவராக இருந்தாலும் சரி, அரசு உயர் அதிகாரியாக இருந்தாலும் சரி எது சரியோ எது உண்மையோ அதை பாகுபாடு பார்க்காமல் செய்துவிடவேண்டும்....................